உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விருபாக்ஷா இயக்குனரின் அடுத்த பட அப்டேட்

விருபாக்ஷா இயக்குனரின் அடுத்த பட அப்டேட்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார்த்திக் தண்டு இயக்கத்தில் சாய் தரம் தேஜ், சம்யுக்தா இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் 'விருபாக்ஷா'. வித்தியாசமான ஹாரர் த்ரில்லர் கதை களத்தில் வெளிவந்த இப்படம் உலகளவில் ரூ.100 கோடி மேல் வசூலித்தது. இந்த நிலையில் கார்த்திக் தண்டு அடுத்த பட அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, விருபாக்ஷா கூட்டணி மீண்டும் இணைவதாக அறிவித்துள்ளனர் விருபாக்ஷா படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் சுகுமார் ரைட்டிங் நிறுவனங்கள் தயாரிக்கும் புதிய படத்தை கார்த்திக் தண்டு இயக்குகிறார். இப்படம் புராண காலத்தில் திரில்லர் கதையாக உருவாகுகிறது. மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !