'கேம் சேஞ்சர்' படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய ஷங்கர்
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இன்று அவருடைய 61வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது தெலுங்கில் அவர் இயக்கி வரும் 'கேம் சேஞ்சர்' படப்பிடிப்பில் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்போது படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, படத்தின் கதாநாயகன் ராம் சரண் மற்றும் படக்குழுவினர் ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழில் 'இந்தியன் 2' படப்பிடிப்பை முடித்த இயக்குனர் ஷங்கர், 'கேம் சேஞ்சர்' படத்தின் படப்பிடிப்பையும் விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளார். இரண்டு படங்களும் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன் 2 குழுவுடன் கொண்டாட்டம்
ஷங்கர் திரையுலகினர் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், 'இந்தியன் -2' படக்குழுவினருடனும் ஷங்கர் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான போட்டோ வெளியாகி உள்ளது.
ஷங்கருக்கு நடிகர் கமல்ஹாசனும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.