இளம் சீரியல் நடிகர் பவன் மாரடைப்பால் காலமானார்
ADDED : 779 days ago
தமிழ், ஹிந்தி சீரியல்களில் நடித்து வந்த பிரபல நடிகர் பவன் மாரடைப்பால் உயிரிழந்தார். கர்நாடக மாநிலம், மாண்டியாவைச் சேர்ந்த பவன் (வயது 25), நேற்று அதிகாலை மும்பையில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்தார். பவனின் இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான மாண்டியாவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 வயதில் பவனின் இந்த மரணம் சின்னத்திரையினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு மாண்டியா எம்எல்ஏ., டி.மஞ்சு உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும், தொலைக்காட்சி உலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.