சென்னிமலை முருகன் கோவிலில் நடிகை நமீதா கணவருடன் தரிசனம்
ADDED : 785 days ago
பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான நமீதா, ஈரோடு மாவட்டம் சென்னிமலையில், ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, கணவர் வீரேந்திராவுடன் சென்றார். முகூர்த்த தினம் என்பதால், கோவிலில் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இந்நிலையில் நமீதா வந்ததை அறிந்த பலர், அவருடன் போட்டோ எடுக்கவும், செல்பி எடுக்கவும் முட்டி மோதினர். அவரும் பலருடன் போட்டோ எடுத்துக் கொண்டார். சுவாமி தரிசனம் முடிந்தவுடன் உடனடியாக கிளம்பி சென்று விட்டார். முன்னதாக கோவில் தல வரலாற்றை, கோவில் புலவர் அறிவிடம், அவர் கேட்டறிந்தார்.