அயோத்தி அனுமன் கோயிலில் ரஜினி சுவாமி தரிசனம்
ADDED : 861 days ago
கடந்த ஆக.,9ல் இமயமலைக்கு புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், ஆன்மிகப் பயணத்தை முடித்துவிட்டு வரும்வழியில் ஜார்க்கண்ட் கவர்னர், உ.பி., கவர்னர், முதல்வர் ஆகியோரை சந்தித்தார். இன்று (ஆக.20) காலையில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.
அதன்பிறகு அயோத்தி சென்ற ரஜினிகாந்த், அங்குள்ள அனுமன் கோவிலில் தரிசனம் செய்தார். ரஜினிகாந்துடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்தும் சென்று இருந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த், இந்த கோவிலுக்கு வர வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. இங்கு தரிசனம் செய்தது எனது அதிர்ஷ்டம் என்றார்.