சோனியா அகர்வால் - ஸ்மிருதி வெங்கட் இணைந்து நடிக்கும் 7 ஜி
ADDED : 783 days ago
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த காதல் கொண்டேன் என்ற படத்தில் அறிமுகமானவர் சோனியா அகர்வால். அதன்பிறகு 7 ஜி ரெயின்போ காலனி, கோவில், புதுப்பேட்டை உள்பட பல படங்களில் நாயகியாக நடித்த சோனியா அகர்வால் சமீபகாலமாக முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் 7 ஜி என்ற ஒரு படத்தில் கதையின் நாயகியாக நடிக்க உள்ளார். இப்படத்தில் சோனியா அகர்வாலுடன் இணைந்து ஸ்மிருதி வெங்கட்டும் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஹாரூன் என்பவர் தயாரித்து இயக்கும் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது.