உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சீனு ராமசாமி இயக்கும் கோழிப்பண்ணை செல்லத்துரை

சீனு ராமசாமி இயக்கும் கோழிப்பண்ணை செல்லத்துரை

கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் உட்பட பல படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக அறிமுகமான தென்மேற்கு பருவக்காற்று படம் தேசிய விருது பெற்றது. அதோடு கடைசியாக விஜய் சேதுபதியை வைத்து அவர் இயக்கி வெளியான மாமனிதன் படமும் பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்றது. இந்த நிலையில் அடுத்தபடியாக கோழிப்பண்ணை செல்லத்துரை என்று ஒரு படத்தை இயக்கப் போகிறார் சீனு ராமசாமி. அது குறித்த அறிவிப்பை ஒரு போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளார்கள். விஷன் சினிமா ஹவுஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஏகன் என்ற புதுமுக நடிகர் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !