விஜய் படத்தில் தனுஷ் பட பிரபலங்கள்
ADDED : 777 days ago
லியோ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் விஜய் விரைவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்கின்றார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் . இப்போது முன் தயாரிப்பு பணிகள் மற்றும் நடிகர், நடிகைகள் டெக்னீசியன் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு கதாநாயகியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார் மற்றும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக சித்தார்த் நுனி இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இவர்கள் இருவருமே தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் பணிபுரிந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.