உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிரஞ்சீவி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

சிரஞ்சீவி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் சிரஞ்சீவி. இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனால் ரசிகர்களை உற்சாகபடுத்தும் விதமாக சிரஞ்சீவி நடிக்கவுள்ள அடுத்த இரண்டு படங்களின் அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். அதன்படி, சிரஞ்சீவி 156வது படத்தை சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதா தனது கோல்ட் பாக்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கின்றார் மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சிரஞ்சீவி 157வது படத்தை 'பீம்பிஷாரா' பட இயக்குனர் வசிஷ்டா இயக்குகிறார். இதனை யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவித்துள்ளனர். மேலும், இது சோசியோ பேண்டஸி ஜானரில் உருவாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !