சூப்பர் ஹிட் படத்தை மிஸ் செய்த வருத்தத்தை பகிர்ந்த விஷ்ணு விஷால்
ADDED : 777 days ago
நடிகர் விஷ்ணு விஷால் வித்தியாசமான கதைகளை தேர்தெடுத்து நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது லால் சலாம், மோகன் தாஸ், ஆரியன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் தான் மிஸ் செய்த சூப்பர் ஹிட் படம் குறித்து பகிர்ந்துள்ளார் விஷ்ணு விஷால். அதன்படி, வெண்ணிலா கபடி குழு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து என் இரண்டாவது படமும் சுசீந்திரன் சார் உடன் நான் மகான் அல்ல படமாக இருந்திருக்க வேண்டியது. கிட்டத்தட்ட உறுதியானது. ஆனால் விதியின் கணக்கு வேறுமாதிரி இருந்தது என நான் மகான் அல்ல படத்தின் 13வது வருட கொண்டாட்ட போஸ்டருக்கு பதிலளித்துள்ளார் விஷ்ணு விஷால்.