மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
740 days ago
குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி'
740 days ago
அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர்
740 days ago
2023ம் ஆண்டின் கடைசி சில மாதங்களில் நுழைய உள்ளோம். கடந்த எட்டு மாதங்களில் 140க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன. இன்னும் உள்ள நான்கு மாதங்களில் எப்படியும் 50க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகலாம்.
வரும் செப்டம்பர் 1ம் தேதி “ரங்கோலி, பரம்பொருள், லக்கி மேன், கிக், கருமேகங்கள் கலைகின்றன” ஆகிய நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன. அவற்றுடன் 'குஷி' டப்பிங் படமும் வெளியாகிறது. விமல் நடித்த 'துடிக்கும் கரங்கள்' படமும் 1ம் தேதி வெளியாவதாக இருந்தது. தற்போது படத்தை செப்டம்பர் 8ம் தேதிக்குத் தள்ளி வைத்துவிட்டார்கள்.
செப்டம்பர் 1ம் தேதிக்குப் பிறகு தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் நான்கைந்து படங்கள் வரை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டும், அக்டோபர் மாதம் விஜயதசமியை முன்னிட்டும், நவம்பர் மாதம் தீபாவளியை முன்னிட்டும், டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சில பல முக்கிய படங்கள் வெளியாக உள்ளன.
2023ம் ஆண்டில் இதுவரை வெளியான 140க்கும் மேற்பட்ட படங்களில் “வாரிசு, துணிவு, டாடா, வாத்தி, அயோத்தி, பத்து தல, விடுதலை, பொன்னியின் செல்வன் 2, குட் நைட், போர் தொழில், மாமன்னன், மாவீரன், டிடி ரிட்டர்ன்ஸ், ஜெயிலர்” ஆகிய 14 படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளன. வரும் மாதங்களில் சில முக்கிய படங்கள் வருவதால் வசூல் ரீதியான வெற்றிப் படங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
740 days ago
740 days ago
740 days ago