28ம் தேதி ரிலீசாகும் 'பார்க்கிங்'
ADDED : 772 days ago
ஹரிஷ் கல்யாண், இந்துஜா இணைந்து நடித்துள்ள படம் 'பார்க்கிங்'. பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை 'பலூன்' படத்தில் கே.எஸ்.சினிஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி உள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலர் நடித்துள்ளனர். குறுகிய காலத்தில் முழு படப்பிடிப்பையும் படக்குழு முடித்துள்ளது.
படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார் மற்றும் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இந்த படம் ரிலீசுக்கு முன்பு தியேட்டர் வெளியீடு, மற்றும் டிஜிட்டல் வெளியீட்டில் லாபம் சம்பாதித்து விட்டதாக படத் தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. அதோடு படம் வருகிற 28ம் தேதி தியேட்டர்களில் வெளிவருவதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.