பிறந்தநாளில் கமலின் 233வது படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது
ADDED : 740 days ago
துணிவு படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசனின் 233வது படத்தை இயக்குகிறார் வினோத் . இதனை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கின்றனர் என ஏற்கனவே அறிவித்தனர். இது ராணுவ வீரர் சம்மந்தப்பட்ட கதை என்பதால் இதற்காக கமல் துப்பாக்கி சூடு பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இதன் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததை தொடர்ந்து இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாள் அன்றே தொடங்குகிறது . மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பையும், பிக்பாஸ் சீசன் 7 இரண்டிலும் கமல் சுழற்சி முறையில் கலந்து கொள்வார் என்கிறார்கள்.