ரஜினி 170வது படத்தில் இணைந்த மஞ்சு வாரியர்
ADDED : 734 days ago
நடிகை மஞ்சு வாரியர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் அசுரன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதையடுத்து துணிவு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தா.சே. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்கின்றார். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார் என ஏற்கனவே அறிவித்தனர்.
இப்போது வருகின்ற நாட்களில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதால் இந்த படத்தில் நடிக்கும் பிரபலங்களை இன்று அறிமுகபடுத்தி வருகின்றனர். துஷரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோரைக் அறிவித்ததைத் தொடர்ந்து இப்போது மஞ்சு வாரியர் இணைந்துள்ளார் என படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.