உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சென்சார் போர்டு மீது விஷால் கூறிய லஞ்ச ஊழல் புகார் : 3 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு

சென்சார் போர்டு மீது விஷால் கூறிய லஞ்ச ஊழல் புகார் : 3 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛மார்க் ஆண்டனி'. இந்த படத்தின் ஹிந்தி பதிப்பை வெளியிட மும்பையில் உள்ள சென்சார் அதிகாரிகள் ரூ.6.5 லட்சம், லஞ்சம் பெற்றனர் என விஷால் புகார் கூறினார்.

இதுபற்றி பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிரா முதல்வரின் கவனத்திற்கும் கொண்டு சென்றார் விஷால். இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த மத்திய தகவல் ஒலிப்பரப்புதுறை அமைச்சகம், விஷாலின் புகார் குறித்து விசாரிக்க அதிகாரிகளை மும்பை அனுப்பி வைத்தது. உடன் நடவடிக்கை எடுத்ததற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார் விஷால்.

இந்நிலையில் சென்சார் போர்டு மீது விஷால் கூறிய லஞ்ச புகார் தொடர்பாக சிபிஐ., வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளது. இதுதொடர்பாக மெர்லின் மேனகா, தீஜா ராம்தாஸ், ராஜன் ஆகிய மூன்று அதிகாரிகளிடம் விசாரணை நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !