மாதவனுடன் டெல்னா டேவிஸ்? - ஆச்சரியத்தில் ரசிகர்கள்
ADDED : 732 days ago
திரைப்பட நடிகையான டெல்னா டேவிஸ் சினிமாவில் அறிமுகமாகி சில படங்களில் நடித்தார். ஆனால், சரிவர வாய்ப்புகள் வராததால் சின்னத்திரைக்கு வந்து சேர்ந்த டெல்னா டேவிஸ், அன்பே வா தொடரில் பூமிகா கதாபாத்திரத்தின் மூலம் அதிக பெயரையும் புகழையும் ரசிகர்கள் மத்தியில் சம்பாதித்திருக்கிறார். இதற்கிடையில் ஒரு பேட்டியில் சினிமாவை விட சீரியலில் நடிப்பது பிடித்து இருக்கிறது என்று கூறியிருந்த டெல்னா டேவிஸ் இனி சினிமாவில் நடிக்கவே மாட்டார் என்றே ரசிகர்கள் நினைத்து வந்தனர். ஆனால், சில தினங்களுக்கு முன் திரையுலக நட்சத்திரமான நடிகர் மாதவனுடன் டெல்னா டேவிஸ் புகைப்படம் எடுத்துக்கொண்டு அதை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் பூமிகா மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறாரா? அதுவும் மாதவனுடனா? என்று ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.