'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் இணைந்த ரெட் ஜெயண்ட் நிறுவனம்!
ADDED : 722 days ago
கடந்த 2014ம் ஆண்டில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா நடித்து வெளிவந்த திரைப்படம் 'ஜிகர் தண்டா'. இதன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'ஜிகர் தண்டா டபுள் எக்ஸ்' என்ற பெயரில் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ்.
இதில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா இணைந்து நடிக்கின்றனர். முதல் பாகத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே இதன் டீசர் மற்றும் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது வருகின்ற தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.