உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரெய்டு படத்தின் இரண்டாம் பாடல் அப்டேட்

ரெய்டு படத்தின் இரண்டாம் பாடல் அப்டேட்

கன்னடத்தில் சிவராஜ் குமார் நடித்து வெளிவந்த 'தகறு' படத்தை தமிழில் 'ரெய்டு' எனும் பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இயக்குனர் முத்தையா வசனத்தில் கார்த்தி இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீ திவ்யா, அனன்திகா, சவுந்தரராஜா, ரிஷி ரித்விக் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகிறது. ஏற்கனவே இப்படத்திலிருந்து டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் இதிலிருந்து இரண்டாம் பாடல் 'அழகு செல்லம்' என்கிற பாடல் அக்டோபர் 24ம் தேதி அன்று வெளியாகும் என படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !