உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யாவின் சனிக்கிழமை : நானி 31வது படத்தின் தலைப்பு அறிவிப்பு

சூர்யாவின் சனிக்கிழமை : நானி 31வது படத்தின் தலைப்பு அறிவிப்பு

'அண்டே சுந்தரனிகி' படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி தனது 31வது படத்தில் நடிக்கின்றார். இப்படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிக்கின்றனர். டிவிவி எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜெக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். நாளை அக்டோபர் 24ந் தேதி அன்று இதன் பூஜை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்று(அக்., 23) இந்த படத்திற்கு 'சரிபோதா சனிவாரம்' என தலைப்பு வைத்ததாக படக்குழுவினர்கள் க்ளிம்ஸ் வீடியோ உடன் அறிவித்துள்ளனர்.



அதோடு இந்த படம் தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகிறது. தமிழ் பதிப்பிற்கு 'சூர்யாவின் சனிக்கிழமை' என பெயரிட்டு முதல் பார்வை போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !