உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித் வீட்டு சுற்றுசுவர் இடிப்பு

அஜித் வீட்டு சுற்றுசுவர் இடிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜான் மற்றும் அரபு நாடுகளில் நடக்கிறது. அஜித் முன்பு சென்னை, திருவான்மியூரில் குடியிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஈஞ்சம்பாக்கத்தில் புதிதாக வீடு கட்டி குடியேறினார்.

இந்நிலையில் ஈஞ்சம்பாக்கம் பகுதிகளில் சாலை விரிவாக்க மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இதற்காக அந்தபகுதிகளில் வசிக்கும் பலரது வீடுகளின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் அஜித்தின் வீட்டு சுற்றுச்சுவரும் இடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !