உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரு வழியாக வெளியாகும் ‛கூழாங்கல்' திரைப்படம்

ஒரு வழியாக வெளியாகும் ‛கூழாங்கல்' திரைப்படம்

நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து தயாரித்த திரைப்படம் 'கூழாங்கல்'. இப்படத்தை பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியுள்ளார். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் செல்லப்பாண்டி, கருத்தடையான் என பல புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

கடந்த 2021ம் ஆண்டில் இந்தப் படம் சில சர்வதேசப் பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை வென்றது. ரோட்டர்டாம் விழாவில் விருது வென்ற முதல் தமிழ்ப்படம் என்கிற அங்கீகாரம் பெற்றது. கடந்த 2021-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்காக இந்தியா சார்பில் இப்படம் பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட வருடங்களாக இந்த படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் இப்போது இப்படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வருகின்ற 27ந் தேதி வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !