முகேன் ராவ் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்
ADDED : 720 days ago
முகேன் ராவ் பிக்பாஸ் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பிறகு 'வேலன்' என்கிற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். சமீபத்தில் 'மை 3' எனும் வெப் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்போது முகேன் ராவ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, புதுமுக இயக்குனர் டி.ஆர்.பாலா இயக்கத்தில் முகேன் ராவ், பவ்யா த்ரிகா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதற்கு 'ஜின்' என தலைப்பு வைத்துள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். ராதாரவி, நிழல்கள் ரவி, வடிவுக்கரசி, பால சரவணன், ஜார்ஜ் விஜய், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு விவேக் சிவா, மெர்வின் சாலமன் இணைந்து இசையமைக்கின்றனர்.