நவ., 1ல் வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி திருமணம் : இத்தாலியில் நடக்கிறது
தெலுங்கு நடிகர் வருண் தேஜ், நடிகை லாவண்யா திரிபாதி ஆகியோர் இணைந்து நடித்த ‛மிஸ்டர் சித்ரா' என்ற படத்தின் படப்பிடிப்பு இத்தாலியில் நடைபெற்ற போது அவர்கள் இருவரும் முதன்முதலாக சந்தித்தார்கள். அந்த சந்திப்பில் இருந்தே அவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டு தற்போது பெற்றோர் சம்மதத்துடன் அவர்களின் திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றுள்ளது. வருகிற நவம்பர் 1ம் தேதி அவர்களது காதல் உருவான இத்தாலியிலேயே திருமணம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது திருமணத்தில் குடும்பத்தார் மட்டுமின்றி நெருக்கமான நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள். அதையடுத்து நவம்பர் ஐந்தாம் தேதி ஐதராபாத்தில் வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி திருமண வரவேற்புரை நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. அவர்களது திருமண அழைப்பிதழ் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. லாவண்யா திரிபாதி தமிழில் பிரம்மன், மாயவன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.