ரூ.5 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய பூஜா ஹெக்டே!
ADDED : 754 days ago
நடிகை பூஜா ஹெக்டே முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார். தற்போது ஹிந்தியில் நடிகர் சாகித் கபூருக்கு ஜோடியாக புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பூஜா ஹெக்டே ரூ. 5 கோடி மதிப்பிலான ரேஞ் ரோவர் என்கிற புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார் எனும் செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.