நவம்பர் 10ம் தேதியில் வெளியாகும் லேபில் வெப் தொடர்!
ADDED : 754 days ago
கனா, நெஞ்சுக்கு நீதி ஆகிய படங்களை இயக்கிய அருண்ராஜா காமராஜ் தற்போது முதல் முறையாக 'லேபில்' என்கிற வெப் தொடரை இயக்கியுள்ளார். இதனை டிஸ்னி ஹாட் ஸ்டார் நிறுவனம் தயாரித்துள்ளனர்.
ஜெய் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த வெப் தொடரில் மாஸ்டர் மகேந்திரன், தன்யா ஹோப், சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீமன்,ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம். சி. எஸ் இதற்கு இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இந்த வெப் தொடர் வருகின்ற நவம்பர் 10ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.