2024ல் இளையராஜாவாக மாறும் தனுஷ்
ADDED : 707 days ago
இசையமைப்பாளர் இளையராஜா இந்திய சினிமாவில் இதுவரை 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இன்றைய தலைமுறை இளைஞர்கள் கூட இவரது பாடல்களை விரும்பி கேட்கின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளதாகவும், இதனை இளையராஜா தயாரிப்பதாக அறிவித்தனர். ஆனால், அதன்பிறகு இதுகுறித்து எந்த அறிவிப்புமும் வெளியாகவில்லை.
இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் அவரது வேடத்தில் நடிக்கவுள்ளார் என தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது. லேட்டஸ்ட் தகவல்படி அவர் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி தான் என்கிறார்கள். இதன் படப்பிடிப்பு 2024ம் வருடத்தில் தொடங்குகிறதாம். 2025ம் ஆண்டில் இப்படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.