பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தயாராகும் பாலகிருஷ்ணா?
ADDED : 741 days ago
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ 'பிக்பாஸ்' . ஹிந்தியில் பிக்பாஸ் 17 சீசன்களை கடந்தது ஒளிபரப்பாகி வருகிறது. ஹிந்தி போலவே இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடத்தி வருகின்றனர்.
தெலுங்கில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை முதலில் நானி தொகுத்து வழங்கினார். இடையில் ஜூனியர் என்டிஆர் வந்தார். கடந்த சில சீசன்களாக நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் பிக்பாஸ் 8வது அடுத்த சீசனில் இருந்து நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பாலகிருஷ்ணா பிரபல ஓடிடி தளத்திற்கு ஒரு டாக் ஷோ தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.