‛வணக்கம் இந்தியா, இந்தியன் இஸ் பேக்' : வெளியானது ‛இந்தியன் 2' அறிமுக வீடியோ
1996ல் கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛இந்தியன்'. இதன் இரண்டாம் பாகம் இவர்கள் கூட்டணியில் தடைகள் பல கடந்து இப்போது உருவாகி உள்ளது. ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் இந்த படத்தின் அறிமுக வீடியோவை இன்று(நவ., 3) தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியிட்டுள்ளனர். தமிழில் ரஜினி, தெலுங்கில் ராஜமவுலி, கன்னடத்தில் சுதீப், ஹிந்தியில் அமீர்கான், மலையாளத்தில் மோகன்லால் ஆகியோர் வெளியிட்டனர்.
முதல்பாகத்தில் பேசிய அதே லஞ்சம் விஷயத்தை தான் இந்தக் காலக்கட்டத்திற்கு ஏற்றபடி படமாக்கி உள்ளனர் என வீடியோவை பார்க்கும்போது தெரிகிறது. அதேசமயம் வீடியோ முடிவில் வெளியிடப்பட்ட ஒரு போட்டோவில் சுதந்திர காலத்து அல்லது அதற்கு முந்தைய ராணுவ வீரர்கள் போன்று ஒரு குரூப் போட்டோவை வெளியிட்டுள்ளனர். அதை பார்க்கும்போது இதில் சேனாபதி கமலின் இளமைக்கால விஷயங்களும் அடங்கி இருக்கலாம் என தெரிகிறது.