உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் திரைக்கு வரும் லவ் டுடே

மீண்டும் திரைக்கு வரும் லவ் டுடே

கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்து இயக்கி ஹீரோவாக நடித்து கடந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி வெளியான படம் ‛லவ் டுடே'. இவானா, ராதிகா, சத்யராஜ், யோகிபாபு, ரவீனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இப்படத்திற்கு யுவன் இசையமைத்திருந்தார். ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் 70 கோடி வரையில் வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தற்போது இப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைவதையொட்டி, நாளை(நவ., 4) ஏஜிஎஸ் திரையரங்குகளில் இத்திரைப்படம் மீண்டும் வெளியாகும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !