உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / படப்பிடிப்பிற்காக தாய்லாந்து பறந்த நடிகர் விஜய்

படப்பிடிப்பிற்காக தாய்லாந்து பறந்த நடிகர் விஜய்

நடிகர் விஜய் தற்போது ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 68வது படமாக உருவாகும் இதை வெங்கட் பிரபு இயக்குகிறார் . யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு விஜய்யின் லியோ படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதற்காக விஜய் சென்னை வந்தார். தற்போது லியோ படம் சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளும் செய்து முடித்த பின் இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு தாய்லாந்துக்கு விமானம் மூலம் சென்றுள்ளார். அவர் சென்னை விமான நிலையத்தில் நடந்து சென்ற வீடியோக்கள், புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !