உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜிகர்தண்டா வெற்றிக்காக திருப்பதியில் சாமி தரிசனம்

ஜிகர்தண்டா வெற்றிக்காக திருப்பதியில் சாமி தரிசனம்


ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் நடித்துள்ள 'ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்' படம் தீபாவளி பண்டிகை படமாக இன்று வெளியானது. இந்த படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம். 1970களில் நடக்கிற மாதிரியான கதை அம்சம் கொண்ட இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் தாதாவாகவும், எஸ்.ஜே.சூர்யா இயக்குனராகவும் நடித்துள்ளனர்.

படத்தின் வெற்றிக்காக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தனர். வேறு படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் எஸ்.ஜே.சூர்யா செல்லவில்லை. இன்று அவர்கள் படம் வெளியாகி உள்ள தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களை நேரில் சந்திக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !