உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டீசல் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

டீசல் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வரும் திரைப்படம் 'டீசல்'. கருணாஸ், சாய் குமார், அனன்யா, வினய் ராய், தங்கதுரை, ரமேஷ் திலக், தீனா, விவேக் பிரசன்னா என பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ள இப்படத்தை தெர்ட் ஐ புரொடக்சன்ஸ், எஸ்.பி.புரொடக்சன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

கடந்தாண்டில் இருந்து இதன் படப்பிடிப்பு பல கட்டமாக நடைபெற்று வந்தது. 75 படப்பிடிப்பு தளங்களில் 100 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று தற்போது நிறைவு பெற்றதாக இன்று படக்குழுவினர்கள் வீடியோவின் மூலம் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !