உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அருண் விஜய் பிறந்தநாளில் வெளியான ‛வணங்கான்' போஸ்டர்

அருண் விஜய் பிறந்தநாளில் வெளியான ‛வணங்கான்' போஸ்டர்

பாலா இயக்கத்தில் சூர்யா தயாரித்து, நடித்து வந்த படம் 'வணங்கான்'. ஒரு சில காரணங்களால் இப்படம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து தற்போது பாலாவின் பீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் வி அவுஸ் புரொடக்ஷன்ஸ் என இரு நிறுவனங்கள் நடிகர் அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து அதே படத்தை தயாரிக்கின்றனர். இதில் ரோசினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு திருவண்ணாமலை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் அருண் விஜய்யின் ஒரு கையில் விநாயகர் மற்றொரு கையில் பெரியார் இடம் பெற்ற போஸ்டர் வெளியாகி சலசலப்பை உருவாக்கியது. இந்த நிலையில் இன்று நடிகர் அருண் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வணங்கான் படக்குழு சார்பாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !