அருண்ராஜ காமராஜ் இயக்கத்தில் நயன்தாரா
ADDED : 683 days ago
அருண்ராஜா காமராஜ் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் தன்மையை வெளிப்படுத்திய அவர் அதன்பிறகு கனா, நெஞ்சுக்கு நீதி ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கினார். சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளிவந்த 'லேபிள்' வெப் தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஏற்கனவே அருண்ராஜா காமராஜ் நடிகர் கார்த்தியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது நடிகை நயன்தாராவை வைத்து முதன்மை கதாபாத்திரத்தில் அருண்ராஜ காமராஜ் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளாராம். இதனை ப்ரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.