மேலும் செய்திகள்
மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா
684 days ago
செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ'
684 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
684 days ago
நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்திய பேட்டியில் லியோ படத்தில் நடித்த கதாநாயகி த்ரிஷா மற்றும் நடிகைகள் பற்றி ஆபாசமாகப் பேசியிருந்தார். அந்த பேச்சு குறித்து தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தார் த்ரிஷா. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உட்பட மற்ற சினிமா பிரபலங்களும் மன்சூரலிகானுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கை : மூத்த நடிகர் மன்சூர் அலிகான் நடிகைகள் பற்றி ஒரு பேட்டியில் பேசிய வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். திரைத்துறையில் பெண்கள் நுழைவதும், சாதிப்பதும் இன்னமும் சவாலகவே இருக்கும் இன்றைய சூழலில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு சாதித்து வரும் நடிகைகளை பற்றி இப்படி மோசமான கருத்துகளை தெரிவித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நடிகைகள் உடன் நிற்கும்.
நகைச்சுவை என்ற பெயரில் தரக்குறைவாக பேசிய அவரின் இந்த போக்கு கவலையையும், கோபத்தையும் உண்டாக்குகிறது. ஒரு நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக பொறுப்புணர்ந்து பேச அவர் கற்றுக் கொள்ள வேண்டும். தான் உதிர்க்கும் கருத்துக்களும், வார்த்தைகளும் கண்ணியமாக இருக்க வேண்டும். அந்த உணர்வின்றி அவர் பேசியது மிகவும் தவறாகும். எந்த ஊடகம் முன்பு அவர் பேசினாரோ அந்த ஊடகம் முன்பு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுகிறோம். அதுவரை அவரை சங்கத்திலிருந்து ஏன் தற்காலிகமாக நீக்க கூடாது என்று நடிகர் சங்கம் கருதுகிறது. வரும் காலங்களில் மற்ற நடிகர்களும் பொதுவெளியில் கருத்துகள் பகிரும்போது கவனமாய் இருக்க வேண்டும்.
இந்த தனி நபர் விமர்சனம் மட்டுமல்லாது வெகுநாட்களாக பொது ஊடகங்களில் மறைமுகமாகவும், நேரடியாகவும் பல பொய் கதைகளையும் திருத்த நிகழ்வுகளையும் பொழுதுபோக்கு என்ற பெயரில் பரப்பி பரபரப்பை உண்டாக்கி கொள்கின்றனர். இதில் சோகமும், கோபமும் இத்துறை சாந்தவர்களே அவற்றை தொகுத்து வழங்குவதுதான். மென்மை உள்ளம் படைத்தவர்கள் என்பதால் ஒவ்வொருமுறையும் நடிக சமுதாயத்தினர் இலக்காக்கப்படுவது இனியும் நிகழாது. தீவிரமான எதிர்வினைகள் சாத்வீகமான முறையில் தொடுக்கப்படும் என்பதையும் தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த சூழலில் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
684 days ago
684 days ago
684 days ago