மம்மூட்டி - ஜோதிகா படத்திற்கு திடீர் தடை
ADDED : 697 days ago
மலையாளத்தில் மம்மூட்டி - ஜோதிகா இணைந்து நடித்துள்ள படம் காதல் தி கோர். இந்த படம் நவம்பர் 23ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டு புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான போது அதற்கு பாராட்டு தெரிவித்து பட குழுவையும் வாழ்த்தி இருந்தார் நடிகர் சூர்யா. இப்படியான நிலையில், இந்த காதல் தி கோர் படத்தின் கதை அம்சம் சர்ச்சைக்குரியதாக இருப்பதாக சொல்லி, கத்தார் மற்றும் குவைத் ஆகிய இரண்டு நாடுகளிலும் இப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும் திட்டமிட்டபடி நவம்பர் 23ம் தேதி இந்த படம் மற்ற நாடுகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதேபோல் ஏற்கனவே இந்திய மொழிகளில் உருவான சில படங்களுக்கு அரபு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .