உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தினேஷின் பேச்சுக்கு ரச்சிதா பதிலடி

தினேஷின் பேச்சுக்கு ரச்சிதா பதிலடி

பிக்பாஸ் வீட்டில் வைல்டு கார்டு என்ட்ரியாக ரச்சிதாவின் கணவர் தினேஷ் உள்ளே போனார். அவர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்ததிலிருந்து அடிக்கடி ரச்சிதாவின் பெயர் அடிப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் டாஸ்க் ஒன்றில் பேசிய தினேஷ், தனக்கும் தனது மனைவிக்கும் இடையேயான பிரச்னை குறித்து தனது பக்க நியாயத்துடன் உருக்கமாக பேசியிருந்தார். இதனையடுத்து பலரும் தினேஷ் மிகவும் பாவம் என்றும் பிரிந்தாலும் ரச்சிதாவை அவர் உண்மையாகவே நேசிக்கிறார் என்றும் சொல்லி ஆறுதல் கூறி வருகின்றனர். இதை பார்த்த ரச்சிதா, 'உங்கள் தரப்பு நியாயத்தை கர்மா அழகாக சொல்லும். அமைதியாக இருப்பது நல்லது, மற்றவற்றை அது பார்த்துக்கொள்ளும்' என்று பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !