இளையராஜா பயோபிக் படத்தில் தனுஷ், சிம்பு இணைகிறார்களா?
ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்த இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு கதை திரைப்படமாக போகிறது. இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இளையராஜாவின் சினிமா வாழ்க்கை மட்டுமின்றி திரைக்குப் பின்னால் அவரது வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களும் இதில் இடம்பெறுகிறது. அதோடு இளையராஜாவின் இசை குழுவில் கீபோர்ட் பிளேயராக பணியாற்றியவர்தான் ஏ.ஆர்.ரஹ்மான். அதன்பிறகு மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் அவர் இசையமைப்பாளராக உருவெடுத்தார்.
அதனால் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் சம்பந்தப்பட்ட சில முக்கிய காட்சிகளும் இடம் பெற போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் வேடத்தில் நடிகர் சிம்புவை நடிக்க வைக்கவும் முயற்சி நடைபெறுவதாக கோலிவுட்டில் ஒரு தகவல் கசிந்துள்ளது. இவர் நடிப்பது உறுதியானால் தனுஷ், சிம்பு இருவரும் இணையும் முதல் படம் இதுவாக இருக்கும்.