முடிவுக்கு வருகிறதா ஈரமான ரோஜாவே 2?
                                ADDED :  710 days ago     
                            
                            விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே தொடர் சூப்பர் ஹிட் அடித்ததையடுத்து சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. ஆனால், இந்த தொடரை இயக்கி வந்த இயக்குநர் திடீரென மரணமடைந்தார். அதன்பிறகு வந்த இயக்குநரும் சீரியலில் இருந்து விலகிவிட்டார். தற்போது டிஆர்பியில் இந்த சீரியல் டல்லடித்து வருகிறது. இந்நிலையில், இந்த சீரியலில் நடித்து வரும் நடிகையான சுவாதி இன்ஸ்டா ஸ்டோரியில் 'விரைவில் ஏதோ முடியப்போகிறதா?' என்று பதிவிட்டிருந்தார். இதனால் சீரியல் முடிய போகிறதா? இல்லை சுவாதி சீரியலை விட்டு விலகுகிறாரா? என ரசிகர்கள் சோகத்துடன் கேள்வி கேட்டு வருகின்றனர்.