உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சின்னத்திரையில் ஹீரோவாகும் கணேஷ் வெங்கட்ராமன்

சின்னத்திரையில் ஹீரோவாகும் கணேஷ் வெங்கட்ராமன்

பிரபல திரைப்பட நடிகரான கணேஷ் வெங்கட்ராமன், அபியும் நானும், உன்னை போல் ஒருவன், தனி ஒருவன் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் முக்கிய ரோல்களில் நடித்திருக்கிறார். எனினும், சினிமாவில் தற்போது அவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில், ஜீ தமிழில் மிக விரைவில் ஒளிபரப்பாகவுள்ள நினைத்தேன் வந்தாய் என்ற தொடரில் கணேஷ் வெங்கட்ராமன் ஹீரோவாக கமிட்டாகியுள்ளதாக சோஷியல் மீடியாவில் செய்திகள் பரவி வருகிறது. இதுகுறித்து எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. எனினும் மிக விரைவில் சீரியலுக்கான டீசர் வெளியாகும் என சின்னத்திரை வட்டாரங்களிலிருந்து தகவல் கசிந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !