கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை
ADDED : 775 days ago
பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காற்றுக்கென்ன வேலி தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார் பிரியங்கா குமார். முன்னதாக ஏற்கனவே பல குறும்படங்களில் நடித்துள்ள அவர் சினிமாவிலும் வாய்ப்பு தேடி வந்தார். இந்நிலையில், அவர் ஹீரோயினாக அறிமுகமான கன்னட திரைப்படம் 'பேட் மேனர்ஸ்' கடந்த நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து சின்னத்திரை தமிழ் ரசிகர்களும் ப்ரியங்காவின் வெள்ளித்திரை பயணம் வெற்றி பெற வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.