சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா
ADDED : 789 days ago
செய்தி வாசிப்பாளரான சரண்ய, நெஞ்சம் மறப்பதில்லை, ரோஜா, ரன், ஆயுத எழுத்து ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் நடிகையாக அவரது கேரியரில் பெரிய ப்ரேக் கிடைக்கவில்லை. இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சரண்யா புது வீட்டின் புகைப்படங்களை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 'இதோ எனது கனவு இல்லத்தில் முதல் கார்த்திகை தீபம்' என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.