தனது வீட்டின் பணி பெண்ணிற்கு உதவிய அல்லு அர்ஜுன்
ADDED : 647 days ago
நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். புஷ்பா படத்தின் மூலம் அவர் தெலுங்கு சினிமா ரசிகர்களை தாண்டி தமிழ், ஹிந்தி சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தற்போது பிஸியாக புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது வீட்டில் பணிபுரியும் பெண்ணிற்கு சப்போர்ட் செய்யும் வீடியோ ஒன்று வெளியானது. அதன்படி, அந்த பெண்ணிற்கு சமூக வலைதளத்தில் 13,000 பாலோயர்ஸ் பின்தொடர்வதாகவும், இந்த வீடியோவின் மூலம் அந்த பெண்ணின் சமூகவலைதள கணக்கிற்கு பாலோவர்ஸ் அதிகரிக்க ஒரு முயற்சியாக இந்த வீடியோவை அல்லு அர்ஜுன் எடுக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.