அமல்ஜித் - பவித்ராவுக்கு விரைவில் டும் டும் டும்
ADDED : 720 days ago
கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான அம்மன் தொடரில் நடித்து வந்த அமல்ஜித்தும் பவித்ராவும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். தற்போது அமல்ஜித், சிங்கப்பெண்ணே என்ற தொடரில் நடித்து வருகிறார். பவித்ரா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கண்ணே கலைமானே தொடரில் நடித்து வருகிறார். தற்போது இவர்களது நீண்டநாள் காதலுக்கு இருவரது குடும்பத்தாரும் பச்சைக்கொடி காட்டியுள்ளனர். எனவே, அமல்ஜித் - பவித்ரா ஜோடிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.