நாக சைதன்யா படத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்ட நாகார்ஜூனா, வெங்கடேஷ்
ADDED : 673 days ago
கார்த்திகேயா பட இயக்குனர் சந்து மொண்டேடி, நடிகர் நாக சைதன்யாவை வைத்து 'தண்டல்' என்கிற படத்தை இயக்குகிறார். கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மீனவர்கள் சமூகத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார்.
கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த படத்தின் துவக்க விழா நடைபெற்றது. நாக சைதன்யாவின் அப்பா மற்றும் நடிகருமான நாகார்ஜூனா மற்றும் நடிகர் வெங்கடேஷ் இருவரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.