எல்.சி.யு பற்றி 10 நிமிட குறும்படம் இயக்கும் லோகேஷ் கனகராஜ்!
ADDED : 664 days ago
லியோ படத்தை அடுத்து ரஜினி நடிக்கும் 171வது படத்தை இயக்குவதற்கு தயாராகி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அதோடு, விக்ரம் படத்தில் இடம்பெற்ற ரோலக்ஸ் கதாபாத்திரத்தை முழுமையாக கொண்ட படம், கைதி-2, இரும்புக்கை மாயாவி என அடுத்தடுத்து பல படங்களை இயக்கும் திட்டங்களை அவர் வைத்திருக்கிறார்.
இந்நிலையில், கைதி படத்தில் நடித்த நரேன் அளித்துள்ள ஒரு பேட்டியில், விரைவில் லோகேஷ் கனகராஜ் ஒரு குறும்படம் இயக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். 10 நிமிட கதையில் உருவாகும் அந்த குறும்படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ள நரேன், அந்த படத்தில் தானும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். இந்த குறும்படம் லோகேஷ் கனகராஜின் சினிமா யுனிவர்சின் (எல்.சி.யு) ஆரம்பத்தை எடுத்துக்கூறும் வகையில் அமையும் என்று தெரிவித்திருக்கிறார்.