அயலான் அடுத்த பாடல் எப்போது? - ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த அப்டேட்
ADDED : 705 days ago
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் அயலான். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது அயலா அயலா என்று தொடங்கும் இரண்டாவது பாடல் வருகிற 20 ஆம் தேதி வெளியாக இருப்பதாக ரஹ்மான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் பொங்கலுக்கு அயலான் திரைக்கு வருவதாக ஒரு போஸ்டர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.