உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனி ஒருவன் 2 அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்குகிறது

தனி ஒருவன் 2 அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்குகிறது

பிரதர், ஜெனி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்த படத்தை அடுத்து தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. முதல் பாகத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடித்த நிலையில், இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடிப்பதற்கு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது ஜெயம் ரவி கைவசம் வைத்திருக்கும் மூன்று படங்களின் படப்பிடிப்பையும் அடுத்தடுத்து முடித்துவிட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தனி ஒருவன்-2 படத்தில் அவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !