தேவாரா படத்தின் டீசர் குறித்து தகவல் இதோ
ADDED : 701 days ago
ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜூனியர் என்டிஆர், இந்திய சினிமா அளவில் கவனம் பெறும் நடிகராக மாறியுள்ளார். கொரட்டலா சிவா இயக்கத்தில் தற்போது ஜூனியர் என். டி. ஆர், 'தேவாரா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜான்வி கபூர் , சைப் அலி கான், பிரகாஷ் ராஜ், சைன் டாம் சாக்கோ, ஸ்ரீகாந்த், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.
இதன் முதல் பாகம் ஏப்ரல் 5, 2024 அன்று வெளியாவதைத் தொடர்ந்து இப்போது இதன் டீசரை வருகின்ற 2024 ஜனவரி 8ந் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பொங்கலுக்கு திரைக்கு வருகின்ற படங்களுடன் இந்த டீசரை திரையரங்குகளில் திரையிட உள்ளதாக கூடுதலாக தெரிவிக்கின்றனர்.