அல்லு அர்ஜுன், அட்லீ, அனிருத் புதிய கூட்டணி
ADDED : 652 days ago
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த 'ஜவான்' திரைப்படம் உலகளவில் ரூ. 1000 கோடி வசூலைக் கடந்தது. இதனால் அட்லீக்கு ரூ. 50 கோடி வரை சம்பள தொகையாக தர தயாரிப்பு நிறுவனங்கள் தயாராக உள்ளது.
அட்லீயின் அடுத்த படத்தில் விஜய், ஷாரூக்கான் போன்ற நடிகர்களுடன் கைகோர்பார் என கூறப்பட்டு வந்த நிலையில் அட்லீ இயக்கும் புதிய படத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இதற்கு அனிரூத் இசையமைக்கின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படப்பிடிப்பு முடித்த பிறகு இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.